தமிழ்நாடு

மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - கோயம்பேட்டில் முதலமைச்சர் பழனிசாமி திறந்தார்

சென்னை கோயம்பேட்டில் 485 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்றாம் நிலை சுத்தகரிப்பு நிலையத்திற்கு மத்திய சென்னை பகுதிகளான அண்ணா நகர், தி.நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம் ஆகிய இடங்களில் இருந்து கழிவு நீர், பெறப்படுகிறது. இந்த நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் பெரிய தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை வரை 60 கிலோ மீட்டர் வரை ராட்சத பைப் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்சாலையை நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுத்திகரிப்பு தண்ணீரை பருகினார். மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்