தமிழ்நாடு

Nellai Issue | தனியாக வெட்டி எடுத்து வீட்டை நோக்கி வைக்கப்பட்ட `மனித தலை’ - அலறும் நெல்லை மாநகர்

தனியாக வெட்டி எடுத்து வீட்டை நோக்கி வைக்கப்பட்ட `மனித தலை’ - அலறும் நெல்லை மாநகர்

thanthitv

தனியாக வெட்டி எடுத்து வீட்டை நோக்கி வைக்கப்பட்ட `மனித தலை’ - யாருடையது? அலறும் நெல்லை மாநகர்

நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பெயிண்டிங் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். 42 வயதான இவர், பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருந்தனர். வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற பாஸ்கரை, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அவரது தலையை எடுத்துச் சென்று, பாஸ்கரின் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வாழவந்த அம்மன் கோவில் சந்திப்பில் நடுரோட்டில் வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த போலீசார் பாஸ்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரை தச்சநல்லூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொலையாளிகளை பிடிக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்

#nellaiissue #nellailatestnews

CM Vijay | தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு - நேரடியாக CM விஜய்யே வருகிறார்

TN Govt | DMK | ``நிதி பற்றாக்குறை; ஏற்கனவே கடன்’’ - திமுக கொண்டு வந்த திட்டம் அதிரடியாக ரத்து

CM Vijay | Dindigul | ``மிகுந்த வேதனை’’ - CM விஜயையும் உலுக்கிய உயிரிழப்பு

TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி