தமிழ்நாடு

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை : செந்தில் பாலாஜி வாக்குறுதி

தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார். க. பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர், தரிசு நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது என்றும், குடிக்க தண்ணீர் வேண்டுமானால் ஆயிரத்து 500 அடி போர் போட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தார். பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும், விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்