தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது...

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

தந்தி டிவி

* சென்னையில் இருந்து விமானம் மூலம் புனே செல்வதற்காக, இன்று காலை 8 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு, நக்கீரன் கோபால் வந்தார். அப்போது அங்கு வந்த அடையாறு காவல் துணை ஆணையர் ஷெசான் ஷாய் தலைமையிலான தனிப்படையினர் அவரை திடீரென கைது செய்தனர்.

* ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்படும் சட்டப்பிரிவு 124ன் கீழ், நக்கீரன் கோபால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், நக்கீரன் கோபாலை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேர விசாரணைக்கு பின், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்