தமிழகத்தில், உண்மையான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார். தி.மு.க கொறடா சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வணிக வங்கிகளில் தவறாக விவசாயத்துக்கு நகை கடன் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சில நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார்.