தமிழ்நாடு

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று திடீரென சீதா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பேச்சிப்பாறை பகுதி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜன், பாலியல் தொல்லை கொடுப்பதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பின்றி அச்சத்தில் வாழ்வதால் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்