தமிழ்நாடு

வரிந்து கட்டி வந்த 5 மனைவிகள் - சீசிங் ராஜா உடல் கடைசியில் யாருக்கு கிடைத்தது?

தந்தி டிவி

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேளச்சேரி காவல் நிலையத்தில் தொழிலதிபர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் கார்த்திக் ஆய்வு செய்தார். பின்னர், மேஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, முழுவதும் வீடியோ படிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், சீசிங் ராஜாவின் உடல், அவரது முதல் மனைவி ஜானகியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிட்லபாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு