தமிழ்நாடு

ஹீலர் பாஸ்கர் கைது - சீமான் எதிர்ப்பு

மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் கட்டமைக்க முயல்வதும்,அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்துவதும் தவறான போக்கு என தெரிவித்துள்ளார்.

மரபுவழி மருத்துவத்தின் வாயிலாகவோ, ஆங்கில மருத்துவத்தின் வாயிலாகவோ எதன் வாயிலாகக் குழந்தையினைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதை எவரும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்றும், அது அவரவர் உரிமை மற்றும் விருப்பத்தினையும் சார்ந்தது எனவும் கூறியுள்ளார்.எனவே ஹீலர் பாஸ்கர், அவரது மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று,உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்