#Pudukottai #GovtHospital #ViralVideo #ThanthiTV Pudukottai | Govt Hospital | அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பணி செய்யும் செக்யூரிட்டி - தீயாய் பரவிய வீடியோ.. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில், தூய்மைப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் மருத்துவப் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் பணியில் தூய்மைப் பணியாளர் ஈடுபடும் காட்சியும், நோயாளிக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத்துடிப்பை பரிசோதிக்கும் பாதுகாவலரின் காட்சியும் வெளியாகியுள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், செவிலியர் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்து, நோயாளிகளுக்கு முறையான மருத்துவச் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்