``என்னை காப்பாத்துங்க’’ சென்னை ஆட்டோவில் வந்த அலறல் சத்தம்.. கொல்கத்தாவில் சிக்கினார் பாலியல் கும்பல் தலைவி
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாக ஆசை காட்டி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து, பங்களா வீட்டில் சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலின் தலைவி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் சென்ற 17 வயது சிறுமி ஒருவர் "என்னை காப்பாற்றுங்கள்" எனக் கதறியுள்ளார். இதைக் கவனித்த பொதுமக்கள் ஆட்டோவை மடக்கி, அச்சிறுமியை மீட்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறித் தன்னை சென்னைக்கு அழைத்து வந்து, ராமாபுரத்தில் உள்ள ஒரு பங்களா வீட்டில் சிறை வைத்துச் சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அச்சிறுமி வாக்குமூலம் அளித்தார். மேலும், அங்கு தன்னாருடன் 10 பெண்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள பங்களா வீட்டில் வளசரவாக்கம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கும்பலின் தலைவியான ரியா கொல்கத்தாவில் கைதாகி உள்ளார்
#chennaiauto #chennailatestnews