தமிழ்நாடு

Hogenakkal | காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி.. கதறும் குடும்பம் - தேடும் பணி தீவிரம்

காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி.. கதறும் குடும்பம் - தேடும் பணி தீவிரம்

thanthitv

Hogenakkal | காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி.. கதறும் குடும்பம் - தேடும் பணி

தீவிரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்த மாணவி, மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட நீரின் வேகத்தில் சிக்கி ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காவிரி ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில், மாணவி இதுவரை மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Cauvery River | காவிரி விவகாரம்.. தமிழகத்துக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு

CM Vijay | TN Assembly | மக்களே ரெடியா..! CM விஜயின் `தெறி' சம்பவம் Loding...

TVK | Chennai | TN Politics | TVK நிர்வாகி துடிக்க துடிக்க கொ*ல.. குலைநடுங்க விடும் வீடியோ

#BREAKING || Theft | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக உடைத்து கொள்ளை - களத்தில் இறங்கிய 5 தனிப்படை

Breaking | Accident | “இன்னும் கொஞ்ச நேரத்துல கேரளா போயிடுவோம்” சிரித்தபடியே கடைசி செல்ஃபி வீடியோ