நேரடியாக பேருந்துகளை இயக்கி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடந்த பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடை பெற்றது. இதில் 1,922 தனியார் பள்ளி பேருந்துகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தானே பேருந்துகளை இயக்கி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.