வேனில் தீ விபத்து - 24 மாணவர்களை பத்திரமாக மீட்ட ஓட்டுநர், உதவியாளர்.மதுரை திருமங்கலத்தில் தீப்பற்றி எரிந்த பள்ளி வேனிலிருந்து 24 மாணவர்களை பத்திரமாக மீட்ட ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு பாராட்டு குவிகிறது. வேனில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர் ரவிச்சந்திரன், உடனடியாக சாலையோரம் நிறுத்தி மாணவர்களை அங்குள்ள பேக்கரிக்குள் அழைத்துச் சென்றார். இதற்கு உதவியாளர் பாண்டியம்மாவும் உதவினார். இருவரும் மாணவர்களை மீட்டு பேக்கரிக்கு அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.