கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியில், ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன், சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை 8 மணியளவில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், ஓட்டுநருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இதில் வேனில் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மயக்கமடைந்த ஓட்டுநரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர்கள் அனைவரும் மாற்று வாகனம் மூலம் பாதுகாப்பாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.