தமிழ்நாடு

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெற்றோர் சாலை மறியலால் ஈடுபட்டதால் பரபரப்பு

பொன்னேரி அருகே எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் எல்கேஜி சிறுமிக்கு பள்ளியின் வேன் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வேன் ஓட்டுநர் பால்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியின் முன் திரண்ட பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்