தமிழ்நாடு

இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதலிடம்...

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் குறித்து UDISE எனப்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை, தேசிய அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி, தேசிய அளவில் தொடக்கப்பள்ளி கல்வியை 100 மாணவ-மாணவிகளில் 94 பேரும், இடைநிலை பள்ளி கல்வியை 75 பேரும், மேல்நிலை பள்ளி கல்வியை 70 பேரும் நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய ரீதியாக எஸ்.டி. பிரிவினரில் 100 மாணவர்களில் 61 பேர் முழுமையாக பள்ளி படிப்பை நிறைவு செய்வதாகவும், எஸ்.சி. பிரிவினர் 65 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 73 பேரும், பொதுப்பிரிவினர் 74 பேரும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண், பெண் விகிதாச்சார அடிப்படையில் இருவருமே சமமாக 70 பேர் முழுமையாக பள்ளிப்படிப்பை முடிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநிலங்களின் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் 86 புள்ளி 2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் 85 புள்ளி 8 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா 85 புள்ளி 6 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்