தமிழ்நாடு

6 -12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறப்பு - ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அக்.8 வரை விடுமுறை

தந்தி டிவி

காலாண்டு விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கடந்த மாதம் கடைசி வாரத்துடன் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து, ஒரு வாரம் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை, 2 ம் தேதியுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் கட்டமாக ஆறாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் துவங்குகின்றன. மழலையர் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வரும் 9ம் தேதி, அதாவது அடுத்த திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்