#Kanyakumari #HostelGirl #HostelWarden #TNPolice #SchoolGirl #ThanthiTV
Kanyakumari | Hostel Girl | தோழியுடன் இணைத்து தவறாக பேசி பள்ளி மாணவிக்கு சித்திரவதை.. விடுதி வார்டன்கள் செய்த செயல் கன்னியாகுமரி மாவட்டம் மேலராமன்புதூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, இரண்டு பெண் வார்டன்கள் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. தன்னைத் தோழியுடன் இணைத்துத் தவறாகப் பேசி, அடித்துத் துன்புறுத்துவதாக மாணவி சென்னையில் இருந்த தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஊர் திரும்பிய தாய் ரஜினி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், இரண்டு பெண் வார்டன்கள் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.