தமிழ்நாடு

"பள்ளிகளில் இந்து அமைப்புகள்? - விசாரிக்க உத்தரவு"

பள்ளிக், கல்லூரிகளில், இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* பள்ளி கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்,

* பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்

* இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஒவ்வொரு கல்லூரியிலும் 10 மாணவர்களை கொண்ட குழு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்து மத தலைவர்களின் வரலாறு, இந்து மத கொள்கைகளை பரப்பி, இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

* மேலும், இந்து மாணவ, மாணவிகள் காதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? எனவும் அந்த குழு கண்காணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

* எனவே, இது குறித்து உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

* மேலும், விரைவில் நடக்க உள்ள சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட உள்ளதாகவும்,

* பள்ளி, கல்லூரிகளில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்