தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த தகவல்களை அளிக்க முருகேஷ் என்பவர் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதில் அளிக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இதனடிப்படையில், உத்தரவிட்டுள்ள ஆணையம், பதிவான வழக்குகள், அதன் தற்போதைய நிலை ஆகிய விவரங்களுடன், வரும் 13 ஆம் தேதி கல்வித்துறை அதிகாரி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அவசர சுற்றறிக்கை அனுப்பியுளார். அதில், 2000 ஆம் ஆண்டு முதல், 2019 ஆம் ஆண்டு வரை உள்ள விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விவரங்களை, காவல் நிலையங்களில் பெறவும் இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை