முழு கட்டணம் கேட்டு பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக எழுந்த புகாரில் 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்கவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலித்ததாக, பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.