தமிழ்நாடு

பள்ளிக்கல்வி தரவரிசை - தமிழ்நாடு முதலிடம்

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள், அதிக தரவரிசை பெற்று முதலிடத்தில் இருப்பதாக,மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பள்ளிக்கல்வி தரவரிசை - தமிழ்நாடு முதலிடம்

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள், அதிக தரவரிசை பெற்று முதலிடத்தில் இருப்பதாக,மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2017-18 கல்வி ஆண்டை அடிப்படையாக கொண்டு, தரவரிசை குறியீட்டை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.அதன்படி, தற்போது மூன்றாவது முறையாக 2019-20 ம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.அதில், தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் உயரிய இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில், அவற்றின் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகிறது.அந்த அடிப்படையில் தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் செயல்பாடு A++ என தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.புதுச்சேரி, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் கடந்த ஆண்டை காட்டிலும் தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்