தமிழ்நாடு

சுடுகாட்டில் எரியூட்டத் தயாரான பள்ளி மாணவரின் உடலை மீட்ட போலீஸ்

தந்தி டிவி

சுடுகாட்டில் எரியூட்ட தயாராக பள்ளி மாணவரின் உடலை, போலீசார் கைப்பற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி ஜீவா நகரில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இங்கு வசிக்கும் முனீஸ்வரன் - காளியம்மாள் தம்பதியின் 2-வது மகன் கார்த்திக் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 15 வயதே ஆன கார்த்திக் காய்ச்சலால் சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் விட்டிலேயே இருந்து வந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கூறாமல், கார்த்திக்கின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்..

உடனடியாக, இது தொடர்பாக தகவல் அறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார், கார்த்திக்கின் உடலில் நெருப்பு மூட்ட தயாராக இருந்த நிலையில், கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவரின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி