தமிழ்நாடு

100 கோடி அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு: "தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கவில்லை" - தீர்ப்பாய உத்தரவை தெளிவுப்படுத்திய உச்சநீதிமன்றம்

நதிகள் பராமரிக்க தவறிய விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகள் பராமரிக்க தவறியதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனடியாக இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசை எச்சரித்ததே தவிர, அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என தெளிவுப்படுத்தினார். எனவே, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே