தமிழ்நாடு

"தண்ணியை சேமிச்சு வச்சுக்கோங்க" - சென்னை மக்களுக்கு ஷாக் நியூஸ்.."வரும் 30 - ம் தேதி முதல்"

தந்தி டிவி

வரும் 30 -ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம், நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுக்க முறையான அனுமதி வழங்க கோரி வருகிற புதன்கிழமை 30- ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடாது என அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்