தமிழ்நாடு

சவுதியில் மகனுக்கு ஆயுள் தண்டனை.. தமிழகத்தில் போராடும் தாய்க்கு சென்னை ஐகோர்ட் சொன்ன செய்தி

தந்தி டிவி

கொலை வழக்கில் சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவரை மீட்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்த போது, கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.சவுதி அரேபியாவில் கடந்த 16 ஆண்டுகளாக தண்டனை அனுபவிக்கும் பாண்டுரங்கனை, மீட்க சட்டப்படியான உதவிகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் சரோஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் விளக்கங்களை கேட்ட நீதிபதிகள்,

இது தொடர்பாக நிவாரண பெறுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்