தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார். ஒசூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டு 70 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் அவருக்கு கண்டிப்பாக ஆதரவு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.