தமிழ்நாடு

சத்தியமங்கலம் : ஊருக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஊருக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஊருக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டம்பாளையம் கிராமத்தில் பவானி ஆற்றங்கரை அருகே பொதுப்பணிக்காக தோண்டப்பட்ட சுமார் 7 அடி ஆழமுள்ள குழியில், பாம்பு ஒன்று நகரமுடியாமல் இருப்பதை கண்ட பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், அது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரிவித்தனர். அப்போது பாம்பு விழுங்கிய இரையை ஜீரணிக்க முடியாமல் கக்கியது. பின்னர் பாம்பை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விட்டனர்.

TN Budget 2026 | தமிழகமே காத்திருக்கும் பட்ஜெட் -என்னென்ன சர்ப்ரைஸ் இருக்கோ..

Palani | Supreme Court | பழனி கோயில் வழக்கு.. முக்கிய திருப்பம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Horse Trading Case | குதிரை பேரம் வழக்கில் திருப்பம்.. இருவருக்கு ஜாமின் கொடுத்த ஐகோர்ட்

Senthil Balaji | TN Politics | `வாபஸ்..' செந்தில் பாலாஜி திடீர் முடிவு

PM Modi | Minister Nirmala Sitharaman | அச்சுஅசலாக பிரதமர் போலவே.. அதிர்ச்சியில் இந்திய மக்கள்