தமிழ்நாடு

சத்தியமங்கலம் எல்லையில் போலீசார் சோதனை - இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இம்மாதம் 30 ஆம் தேதி வரை மாவட்டம் தாண்டி நுழைய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய கள்ளிப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ- பாஸ் இல்லாமல் வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பி அனுப்பினர். உரிய அனுமதியுடன் வருமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்