சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம். இன்று காலை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் நடமாடிய தோடு, நீண்ட நேரம் முகாமிட்டன. இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரம் யானைகள் சாலையில் நின்று கொண்டே இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை காட்டிற்குள் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.