தமிழ்நாடு

லாரிகளில் கரும்பு தேடிய யானை - விரட்டியடித்த லாரி ஓட்டுநர்கள்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் சாலையோரம் நின்றிருந்த லாரிகளில் கரும்பு உள்ளதா என ஒற்றை யானை லாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திம்பம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நீண்ட வரிசையில் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நின்றிருந்தன. அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, லாரிகளில் கரும்பு உள்ளதா என தேடிப் பார்த்தது. யானை நடமாட்டத்தை கண்டு லாரி ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். லாரி ஓட்டுநர்கள் அனைவரும் சேர்ந்து யானையை சத்தம் போட்டு சுமார் அரை மணி நேரம் போராடி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்