தமிழ்நாடு

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18 ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இது குறித்து. இதனிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது சட்டம் ஒழுங்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ள சத்யபிரதா சாகு, இந்த ஆலோசனையில் தேர்தல் பணிக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லாவும் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்