தமிழ்நாடு

சதுரங்க வேட்டை பட பாணியில் பணமோசடி : நண்டு பண்ணை நிறுவனம் பல கோடி வசூல்

சதுரங்க வேட்டை பட பாணியில் பல கோடி ரூபாய் பணமோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

தந்தி டிவி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நண்டு பண்ணை அமைத்து , அங்கு வளர்க்கப்படும் நண்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக சென்னை வடபழனியை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 10 மாதத்தில் இரட்டிப்பாக பணம் திருப்பி தரப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது.

இதை நம்பி குடியாத்தத்தை சேர்ந்த தண்டபாணி உள்ளிட்ட பலர் அந்த நிறுவனத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 25 கோடி ரூபாய் வரை வசூலித்த அந்த நிறுவனம் சொன்னபடி பணத்தை இரட்டிப்பாக திருப்பி தரவில்லை. சிலருக்கு ஆயிரக்கணக்கில் மட்டும் பணம் கொடுத்து ஏமாற்றியுள்ளது. நிறுவனத்தை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அலுவலகம் காலி செய்யப்பட்டது . இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீசில் புகார் அளித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி