ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும் சகதியுமாக காணப்படுவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.