சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய நால்வரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி பிரிவு ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.