தமிழ்நாடு

சாத்தான்குளம் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தந்தி டிவி

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிபதி தாண்டவன் விசாரித்தார். அப்போது காவலர் முருகன் மற்றும் சிபிஐ தரப்பில் காணொலி காட்சி வாயிலாக வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். வழக்கு தொடக்க நிலை விசாரணையில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்த சிபிஐ முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் காவலர்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்ஸிஸ் ஆகிய 2 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது,.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்