தமிழ்நாடு

பொய்யான வழக்குகள் பதியப்பட்டே ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ. தகவல்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரிய வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. சம்பவம் நடந்த அன்று, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியே சென்றிருந்தார் என்றும், அவர் காவல் நிலையத்தில் இல்லை என்று அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், சி.பி.ஐ. எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து உள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. ஸ்ரீதருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், தற்போது ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு அறிவிப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு