தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், கடுமையாக தாக்கியதில் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 5 பேரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?