அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருந்தால்தான், எதிரிகளை வெல்லமுடியும் என்று சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எந்தவொரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல என்று சாடியுள்ளார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக் காத்த இயக்கத்தை சீரழித்து விடாதீர்கள் என்று அறிவுறுத்திய அவர், இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், தன்மீது விழுந்த அடியாகத்தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்தால்தான் வரும் நாட்களில் எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர்ந்ததாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.