தமிழ்நாடு

"செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றாக உள்ளது" - தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தகவல்

சர்கார் படத்தின் கதையும், செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே, கதை சர்ச்சை தொடர்பாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ராஜேந்திரன் முறையிட்டுள்ளார். அது தொடர்பாக ராஜேந்திரனுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு செங்கோல் என்ற தலைப்பில் ராஜேந்திரன் பதிவு செய்து வைத்துள்ள கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த சர்ச்சையில் தங்களால் உதவ முடியாது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில், கதை சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்