தமிழ்நாடு

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. உடல்நிலையை காரணம் காட்டி அவர் தரப்பில் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், உடனே சரணடையவும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு ஆம்புலன்சில் வந்த ராஜகோபால் சரணடைந்தார். பின்னர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, ராஜகோபாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி