தமிழ்நாடு

ராஜகோபால் உடல் நாளை அடக்கம்

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

தந்தி டிவி

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால், நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி ஆம்புலன்சில் வந்து சரணடைந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி, அவரது மகன் அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, நேற்று உயிரிழந்தார்.

இதனிடையே, ராஜகோபாலின் உடல், திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான வனத்திருப்பதியில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. புன்னைநகரில் உள்ள ராஜகோபாலுக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக அந்த இடத்தை ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு சுத்தப்படுத்தப்படும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை