தமிழ்நாடு

சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார்...

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று உயிரிழந்தார்.

தந்தி டிவி

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபாலை, நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 9ஆம் தேதி ஆம்புலன்சில் வந்து சரணடைந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி அவரது மகன் அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, இன்று உயிரிழந்தார். அவரது உடல் மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனைக்கு பிறகு, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு