தமிழகத்தில் நல்ல ஆளுமையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறமையான ஆட்சி நடத்தி வருவதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில், அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், குடியுரிமை சட்டத்தில் எந்த இடத்திலும், இஸ்லாமியர் நாடு கடத்தப்படுவார் என கூறவில்லை என தெரிவித்தார்.