கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைய பெற்றுள்ள திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதி பூஜை விழா விமரிசையாக நடந்து வருகிறது. சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பாத தரிசன விழா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.