தமிழ்நாடு

"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி, ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 7 பேரில் ஒருவரான சாந்தன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில், பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார்.

* விடுதலைப்புலிகள் அமைப்பில் தாம் உறுப்பினராக இருந்தாக குறிப்பிட்டு உள்ள சாந்தன், இந்தியாவில், அப்போது, அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

* ராஜீவ்காந்தியை தாம் கொல்லவில்லை என கூறியுள்ள சாந்தன், இந்த படுகொலையை தாம் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

* 1991 - ல் தாம் கைது செய்யப்பட்டபோது, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர், வேறொரு சாந்தன் புகைப்படத்தை காட்டியதை இந்த கடிதத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

* வயதான தாய்க்கு செய்ய வேண்டிய கடமை தமக்கு உள்ளதாகவும், எனவே, உறவுகளுடன் தம்மை சேர்த்து வைக்குமாறும் உருக்கமாக சாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* எனவே, தம்முடைய சிறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகில் சிறகடித்து பறக்க உதவுமாறு, இந்த கடிதத்தில் சாந்தன்

வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி