தமிழ்நாடு

சாந்த லிங்க ராமசாமி அடிகளார் காலமானார்

கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தந்தி டிவி

* கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. மடாலாய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அடிகளாரின் உடலுக்கு, அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆன்மீக சான்றோர் , தமிழறிஞர்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வந்து, இறுதி அஞ்சலி செலுத்தினர்.

* மாலையில், மடாலாயத்தில் உள்ள நடராஜர் ஆலய வளாகத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

* கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மிகப் பணி மட்டுமின்றி மிகச்சிறப்பாக தமிழ் பணியையும் ஆதீனம் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

* மேலும், தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்ததோடு, கொங்கு மண்டலத்தில் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு