தமிழ்நாடு

Sankaranatham Dan| முக்கிய நீராதாரத்திற்கே இந்த நிலையா..

thanthitv

சங்கரநத்தம் அணைக்கட்டை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றின் குறுக்கே 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த சங்கரநத்தம் அணைக்கட்டு தற்போது புதர் மண்டி காணப்படுகிறது இப்பகுதி விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணைக்கட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் நீர்ப்பாசன வசதியும், நீர்தேக்க திறனும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அணைக்கட்டு பகுதியில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அணையை தூர்வாரி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

TVK | தன் கட்சியை தவெகவோடு இணைத்தார்.. அதிரும் பனையூர்

Tirupati | திருப்பதியில் 3கி.மீ வரை வரிசை.. 24 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்

Mekedatu Issue| ``என்ன ஆனாலும் பரவாயில்ல..’’ - மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கிளப்பும் பிரளயம்

கேரளத்தில் நேற்று மட்டும் 13,539 பேர் - ஷிகெல்லா, டெங்கு, நிபா, ரேபிஸ்.. கொத்தாக படையெடுப்பதால் பீதி

Droupadi Murmu | CM vijay | குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் - CM விஜய் புகழாரம்