தமிழ்நாடு

உலக்கையால் மனைவிக்கு நேர்ந்த சோகம் - கடைசியில் கணவன் விபரீத முடிவு

தந்தி டிவி

குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள கீழத்திருவேங்கடம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி - சீதாலட்சுமி தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த கருப்பசாமி, உலக்கையால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சீதாலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு பயந்து, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், சீதாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு