தமிழ்நாடு

லஞ்சம் கேட்பதாக துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி...

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக கூறி, துப்புரவு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பாலாஜி என்பவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி மிரட்டுவதாக, திருச்சி ஆட்சியரிடம் பாலாஜி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், பாலாஜியை விசாரணைக்கு அழைத்த திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், பாலாஜியை தரக்குறைவாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், துப்புரவு அலுவலகம் முன்பு விஷம் குடித்து, பாலாஜி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்